திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) இடைநிறுத்தப்பட்டுள்ள உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப கற்கைநெறியை (HND IT) மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) உயர் தேசிய டிப்ளோமா தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி (HND IT) நிறுத்தப்பட்டுள்ள விடையம் தொடர்பாக உயர் தொழில்நுட்ப நிறுவன மாணவர் குழு இன்று (04) தன்னை நேரில் சந்தித்து தெரிவித்ததாகவும், இதனால் மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்பட இடமளிக்ககூடாது என்பதால் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இதன்போது கற்கைநெறியை தொடர்ந்து நடத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் தன்னிடம் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ATI) கணக்கியலுக்கான உயர் தேசிய டிப்ளோமா, ஆங்கிலத்திற்கான உயர் தேசிய டிப்ளோமா, சுற்றுலாத்துறைக்கான உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறிகளுடன் சேர்த்து தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறியும் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிக்கான விரிவுரையாளர் இல்லாத காரணத்தினால் இலவச, முழு நேரத்திற்குரிய தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நேற்றையதினம் (03) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment