திருகோணமலை தம்பலகாமம்-பொலிஸ் பிரிவுக்கு கல்மெடியாவ பகுதியில் விபச்சார விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (02) மாலை இடம் பெற்றுள்ளது.
தம்பலகாமம் -கல்மெடியாவ பகுதியில் தேநீர் கடையொன்றினை நடாத்தி வருவதைப் போன்று விபச்சார விடுதி நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தேநீர் கடையை சோதனையிட்ட போது தேநீர் கடைக்கு பின்னால் அரையொன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மற்றும் ரத்னபுர பகுதிகளைச் சேர்ந்த 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment