திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து நேற்று (27) குடும்பத்தாருடன் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வருகின்றது.
இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனான திருகோணமலை-மனையாவளி பகுதியில் வசித்து வரும் எஸ். கோகுலராஜ் (16வயது) எனவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment