சொய்ஸா கொலை தொடர்பில் சி.சி.டீ.வி. தடயங்கள் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சொய்ஸா கொலை தொடர்பில் சி.சி.டீ.வி. தடயங்கள்

Share This


பிரபல கராட்டே வீரரும் இரவு விடுதியின் சொந்தக் காரருமான வசந்த சொய்ஸா கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவரது கொலை தொடர்பான தடயங்கள் சீ.சீ.டி.வி. ஊடாகப் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் ‘கடபணஹ’ பகுதியிலுள்ள இவரின் இரவு விடுதியில் நேற்று முன்தினம்(24) இரவு 11.45 மணியளவில் தலைக் கவசங்களுடன் வந்த கும்பலொன்று ஆயுதங்களினால் இவரை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வடமத்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ விஜே குணவர்தன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிறி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீர சிங்க ஆகியோரின் உத்தரவில் தொடர்ந்தும் மேலதிக விசாரணை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Pages