உணர்வுகளின் வரலாற்றை எழுத்தில் தந்த பெலாரஸ் பெண்ணிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

உணர்வுகளின் வரலாற்றை எழுத்தில் தந்த பெலாரஸ் பெண்ணிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

Share This




2015 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஸ்வெட்லானாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படைப்பிலக்கியத் துறையில் உலகளாவிய சாதனை படைத்ததற்காக, ஐரோப்பிய நாடான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸீவிச்சுக்கு (வயது 67) இந்தப் பரிசு வழங்கப்படவுள்ளது.

இதை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நோபல் பரிசு குழு நேற்று (08) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

‘‘நமது காலத்தின் பாடுகள் மற்றும் துணிச்சலுக்கான நினைவுச்சின்னமாக இவரது பல குரல் கொண்ட எழுத்துக்கள் ஒலித்துள்ளன’’ என நோபல் விருதுக்குழு தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 40 ஆண்டுகளாக சோவியத் மக்கள் மற்றும் சோவியத்திற்கு பிந்தைய காலகட்ட மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை விபத்து துயரம், ஆப்கானிஸ்தான்– சோவியத் போர் போன்றவற்றின் இவரது பதிவுகளை உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பல்லாயிரக்கணக்கானோரை பேட்டி கண்டு, நாம் அறிந்திராத நிகழ்வுகளை தந்திருக்கிறார்.

அதேவேளை, இவர் உணர்வுகளின் வரலாற்றையும், ஆன்மாவின் சரித்திரத்தையும் தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோபல் பரிசினை வென்ற 14 ஆவது பெண் என்ற சிறப்பையும் இவர் பெறுகின்றார்.

No comments:

Post a Comment

Pages