உலகின் தலைச்சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரும், நியூசிலாந்த்தின் வரலாற்றிலிலேயே அதிக வருமானம் பெறும் ரக்பி வீரருமான சோனி பில் வில்லியம்ஸ், இஸ்லாம் தன் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் குறித்து, இரு தினங்களுக்கு முன்பு பிபிசி-க்கு அளித்த பேட்டியில் விவரித்திருக்கிறார்.
2009-ல் இஸ்லாமை தழுவிய வில்லயம்ஸ், அதற்கு முன்பு பல்வேறு தவறான செய்கைகளுக்கு விமர்சனங்களை எதிர்க்கொண்டவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மனைவியிடம் குடித்து விட்டு தகராறு செய்ததும் இதில் அடக்கம்.
"நான் பெண்களை விரட்டிக்கொண்டிருந்தேன், அதிகமதிகமாக குடித்தேன். விரும்பிய அளவு செலவு செய்தேன். யாரும் வாழாத வாழ்வை வாழ்வதாக நினைத்தேன். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கு எதை கொடுத்தது? இதயத்தில் வெற்றிடத்தை மட்டுமே கொடுத்தது. இஸ்லாம் என்னிடத்தில் நேர்மறையான எண்ணங்களை கொண்டுவந்தது. ஆம், இதற்கு காலம் எடுத்தது. ஒரு வெற்றிகரமான விளையாட்டு வீரனாக என்னை மாற்றியது. இன்று நான் இருக்கும் நிலைக்கு இஸ்லாமே காரணம். அல்ஹம்துலில்லாஹ் (புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக) என்ற வார்தையே நான் அதிகம் உச்சரிக்கின்றேன்"
தன்னுள் இஸ்லாம் ஏற்படுத்திய மாற்றங்களை கண்ட தன் தாயும், சகோதரரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் கூறுகிறார் வில்லியம்ஸ்.
No comments:
Post a Comment