திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் ஒன்று கூடிய 13 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்கு சட்டத்தின் போது கோயில் ஒன்றில் ஒன்றுகூடிய 13 பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும் அவர்களை பிணையில் விடுவித்ததுடன், பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளுடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 16 தொடக்கம் 80 வயதுடையவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
(அப்துல்சலாம் யாசீம்)
No comments:
Post a Comment