நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்கவும் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்கவும்

Share This



உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பாவிக்குமாறு கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி எஸ். சிறிதர் கோரிக்கை விடுத்துள்ளார்.





 கிழக்குமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தில்   இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.





கொரோனா நோயைத் தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் அதனை தடுக்கும் முகமாக ஆயுர்வேத திணைக்களம் பாரிய முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் அதில் ஒரு கட்டமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் பாரிய மருந்து வகைகளை விநியோகம் செய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 





திருகோணமலை மாவட்டத்தில்  கிண்ணியா, நிலாவெளி மற்றும் கப்பல் துறை போன்ற வைத்தியசாலைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் நோக்கில் மருந்து வகைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கபச்சுர குடிநீர், பிரண ஜீவனி, HERBAL FUMES போன்ற மருந்து வகைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் இதன்போது தெரிவித்தார். 





இதேவேளை இஞ்சி, வெள்ளைப் பூடு, கொத்தமல்லி, நெல்லி, சீந்தில் போன்றவற்றை நாளொன்றுக்கு 2 தடவைகள் குடிக்குமாறும் இலகுவான யோகாசனம் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 




No comments:

Post a Comment

Pages