கொரோனா சூழலை சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள்
தாக்குதல் நடத்தலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் அந்தோணியோ கோட்ரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஐ.நா.பொதுச்செயலர் அந்தோணியோ கோட்ரஸ் கூறியதாவது:
உலகின் ஆரோக்கியம் முதன்மையான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு நாடும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் பொருளாதாரப் பின்விளைவுகளில் இருந்து விடுபடத் தவித்து வருகிறது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனைகளிலும் இதே நிலைதான்.
இந்த துயரமான சூழலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம். அரசுகளின் கவனம், நோய்த்தடுப்பில் இருக்கும் நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். ஒற்றுமையுடன் இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். உலக நாடுகள், வேலையின்மை, தொழில்கள் முடக்கம் போன்ற பிரச்னைகளையும், நமது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
Thamilan lk
No comments:
Post a Comment