(கே.ஆர்.ஹெலன்)
1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடாத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்டது.
உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.
இதனை தொடர்ந்து 1993 மே மாதம் 3 ம் திகதி ஜ.நா களின் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு.ஊடக அரசுக்கு சுதந்திரத்தை வழியுறுத்தி வருகின்றது.பல்வேறு சந்தர்ப்பங்களில் பல நாடுகளில் ஏன் நமது நாட்டிலும் ஊடக அடக்கு முறைகள்,ஊடகவியலாளர்கள் கொலைகள்,ஊடக நிறுவனங்கள் தாக்கப்படுதல் என சொல்லலாம்.இவ்வாறு ஊடகவியலாளர்கள் படுகொலைகள் செய்யப்பட்ட நாடுகளில் இன்றும் அவர்களை நினைவுப்படுத்தும் ஊடக விருதுகள் ஊடக சுதந்திரத்தை மேற்கோள் காட்டுகின்றது.
இன்றைய சூழலில் கொரொனா தாக்கத்தினால் ஊடகவியலாளர்கள் அன்றாட தரவுகள்,செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகின்றார்கள்.இதனால் இந்நோயின் தாக்கம்.பாதுகாப்பு முறைகள் பற்றிய தெளிவு மக்களுக்கு கிடைக்கின்றது.
உலக ஊடக சுதந்திரம் தினத்தில் இன்னமும் முடக்கப்பட்டிருக்கிற,பேனைகளை உடைக்கின்ற அரசுகள் ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.மேலும் ஊடகவியலாளர்கள், சுதந்திர ஊடகவியலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment