கொவிட்19 வைரஸ் அசாதாரண சூழ்நிலையினால் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சமூக பிரதிபலன் திட்டத்தின் முதல் கட்டத்தின் கடந்த ஏப்ரல் மாதத்திற்காக மொத்தமாக 119018 பயனாளிகளுக்கு தலா ஒருவருக்கு 5000 ரூபா என்றடிப்படையில் 595,090,000.00 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இதில் சமுர்த்தி பெறும் குடும்பங்கள் 62917 சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் 23302 குடும்பங்களும் முதியோர் கொடுப்பனவு மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவற்றில் உள்ள 8495 நபர்களும் சிறுநீரக கொடுப்பனவு மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 8495 நபர்களும் விசேட தேவையுடையவர்கள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2924 பயனாளிகளும் ஜீவனோகபாயத்தை இழந்த 29132 குடும்பங்களும் உள்ளடங்குவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment