சோமாவத்தி காட்டுப் பகுதியில் 31 பேர் கைது - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சோமாவத்தி காட்டுப் பகுதியில் 31 பேர் கைது

Share This



(அப்துல்சலாம் யாசீம்)








பொலன்நறுவைக்கும்-கந்தளாயிக்கும் இடைப்பட்ட சோமாவதி  காட்டுப்பகுதியில்  சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. 





வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம்- இராணுவத்தின் விசேட சுற்றி வளைப்பு பிரிவினரும் இணைந்து சோமாவதி காட்டுப்பகுதியை சுற்றி வளைத்த போது சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள், கோடாரி, கத்தி மற்றும் சூட்டிறைச்சி  போன்றவற்றுடன் 31  சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். 





கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 





இதேவேளை கந்தளாய், மொரவெவ மற்றும் சோமாவத்தி  அரச காட்டுப் பகுதியில் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்க உள்ளதாகவும் வன விலங்கு பாதுகாப்பு காரியாலயத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். 







No comments:

Post a Comment

Pages