நாடு மெல்ல மெல்ல இரானுவ ஆட்சியாக மாறுகிறது வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவிப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

நாடு மெல்ல மெல்ல இரானுவ ஆட்சியாக மாறுகிறது வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவிப்பு

Share This








இன்று மெல்ல மெல்ல ராணுவ மயமாகும் இலங்கையின் ஆட்சி என்று வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார் 




இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்


சிவில் ஆட்சியை நிலைநிறுத்த ஒரு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றது ஒருராணுவ அதிகாரி  அதற்காக ஒட்டுமொத்த ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொண்டோம் என்பது அல்ல.


சராசரியாக அரை கோடி மக்கள் இன்றைய ஜனாதிபதியின் தெரிவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.பதவிப்பிரமானம் செய்த போது கூட அவர் ராணுவ உடையில் பதவியேற்றார். நாம் எதிர்பார்த்தது ஒரு ஜனநாயக சிவில் ஆட்சி ஆகும்அதற்கான தெரிவு மெல்ல மெல்ல போலீஸ் அதிகாரங்களும் ராணுவ அதிகாரங்களும் விழுங்கிக் கொண்டது. படிப்படியாக அனைத்தையும் ராணுவ அதிகாரிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.




கொரோனா நோயை பயங் காட்டியவுடன் நாட்டில் ஐனநாயக குரல்கள்  அடங்கிவிட்டன. அரசியல் குரல்கள் கொரோனாவுக்கு பயந்து அதுவும் அடங்கிவிட்டன.தடுப்பு செயலணியின் தலைவராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டார்.  சுகாதார அமைச்சின்  செயலாளராக ஒரு ராணுவ அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.அது மட்டுமல்ல தற்போது ராணுவ அதிகாரிகள் விமான நிலையங்களிலும்  நியமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


எனவே மீண்டும் பறிபோய்விட்டது ஜனநாயகம்இன்று இந்த நாட்டில் மீண்டும் பறிபோன ஜனநாயகத்தினை மீட்பதற்கு ஒரு தேர்தல் வருகின்றது விட்ட தவறுகள்  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு  ஒரு பாடத்தைச் சொல்லித் தந்திருக்கின்றது




 எனவே இன்றைய முடிவு மக்களின் கைகளில் ராணுவ ஆட்சியா? அல்லது மக்கள் ஆட்சியா?  மக்கள் தெரிவு செய்வார்கள் மக்கள் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் இம்முறை தேர்தலில். என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Pages