(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேசத்தில் குளத்துக்கு குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (29)வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா - அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன் றிஷாத் முகம்மட் (17வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கிண்ணியாவிலிரு
உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment