நாங்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் –இம்ரான் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

நாங்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் –இம்ரான்

Share This


(அப்துல்சலாம் யாசீம்)



ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.திருகோணமலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவுள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் அனுமதி வழங்கியது.



இது இவ்வாறிருக்க நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் என  சிறு குழுவினர் கூடி எம்மை கட்சியைவிட்டு நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளமை  வேடிக்கையாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன்  உள்ளனர். ஆகவே நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.



நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிலர் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது அவர்களுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில் டீல் அரசியல் காணப்படுகிறது என்பதுக்கு சிறந்த உதாரணம். இந்த செயற்பாடுகள் மூலம் அரசின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்புவதை தடுப்பதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த சிறு குழுவின் நோக்கம்.



இன்று ஐக்கிய தேசிய கட்சி என கூறுபவர்கள் யார் என பாருங்கள் ராஜபக்சக்களுடன் டீல் வைத்துள்ளவர்கள்,  மத்திய வங்கியை கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள்,  மக்கள் ஆதரவு இல்லாமல் தேசிய பட்டியலை நம்பி உள்ளவர்கள்.



ஆனால் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் போடியிடும் நாம் அனைவரும் உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்கள். டீல் அரசியல் செய்பவர்கள் யாரும் இங்கில்லை. ஆகவே விரைவில் இவ்வளவு காலமும் டீல் அரசியல் செய்து ஐக்கிய தேசிய கட்சியை அழித்தவர்களிடம் இருந்து எமது கட்சியை பாதுகாத்து ஆட்சியையும் கைப்பற்றி உண்மையான ஐக்கிய தேசிய கட்சிகாரர்களாக நாம் சிறிகொத்தவுக்குள்ளும் பாராளுமன்றத்துக்குள்ளும் நுழைவோம் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages