திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் உள்ளூர் துப்பாக்கியை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரொட்டவெவ இராணுவ சோதனைச்சாவடியில் வைத்து இன்று (23) மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை சோதனையிட்ட போதே அவரிடமிருந்து உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, எத்தாபெந்திவெவ, கடவத்த குபுறுயாய வீதியைச் சேர்ந்த சுனில் சாந்தகே ஹசேல பிரியசாந்த (25வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தான-றத்மலை பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிள் வந்துகொண்டிருந்தபோது அதனை சோதனை இடுவதற்காக நிறுத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நிறுத்தாமல் செல்வதற்கு முற்பட்டதாகவும் இதேவேளை அவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து உள்ளூர் உற்பத்தி துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் இதனையடுத்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை நாளைய தினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சந்தேக நபர் தொடர்பில் முன் குற்றங்கள் பற்றிய விபரங்களை திரட்டி வருவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment