திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பகுதியில் யானையின் தாக்குதலினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (11) மாலை 4.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயாரான தோப்பூர், பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பரராஜசிங்கம் அமராவதி
(49 வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் சம்பவ இடத்தில் காணப்படுவதாகவும் தோப்பூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ. ஜே. எம். நூறுல்லாஹ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment