திருகோணமலை, மூதூர் கிழக்கிலுள்ள பொதுமக்கள், தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாய விலைகளில் கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மூதூர் கிழக்கில் சேனையூர், கட்டைபறிச்சான், சம்பூர், கடற்கரைச்சேனை, சூடைக்குடா, கூனித்தீவு, இளக்கந்தை, பாட்டாளிபுரம், பள்ளிக்குடியிருப்பு உட்பட பல பகுதிகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், மூதூர் கிழக்கில், சதொச விற்பனை நிலையமொன்றைக் திறக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் சதொச கிளை திறக்கப்படவில்லை என, மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென, மூதூர் கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment