கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி. - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கொரோனா தடுப்பு மருந்துக்கு உரிமை கோரும் இத்தாலி.

Share This



கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர்.


கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.


“இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது மனித செல்களில் உள்ள கொரோனா வைரஸை செயல் இழக்க செய்யும்.


இது தான் இத்தாலியில் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது.



மனித உடலில் பரிசோதித்து பார்ப்பது கோடை காலத்திற்கு பிறகு நடைபெறும்” என்று கூறியுள்ளார்.


இம்மருந்தினை எலிகளில் பரிசோதித்து பார்த்த போது வைரஸ் தொற்றுவதை தடுக்கும் ஆன்டிபாடிகள் உருவானது தெரியவந்தது. 


இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த தகவல்கள் படிப்படியான ஆய்வுகளின் மூலம் தெரிய வரும் என்று இத்தாலி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Pages