சலூன் உரிமையாளர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சலூன் உரிமையாளர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்!

Share This



திருகோணமலை - கிண்ணியா பிரதேசத்திலுள்ள சலூன் உரிமையாளர்களுக்கு  சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ. எம் எம். அஜித் முக்கியமான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார். 





இவ்வறிவித்தலை இன்று (12) வெளியிட்டுள்ளார். 





இந்த அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 




ஓடும் நீர் வசதிகள்.போதுமான  இட வசதி இருத்தல், 


சலூனியில்  உள்ளும், வெளியும் கைகழுவும் வசதி இருத்தல் வேண்டும் எனவும் 


தொழிலாளிகளின் பெயர் விபரம், 


இரண்டு நாட்களுக்கு போதுமான துண்டுகளை வைத்திருக்குமாறும் அல்லது வாடிக்கையாளர்களை கொண்டுவர செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 





இதேவேளை 


காலால் இயக்க கூடிய Bin இருத்தல், 


போதுமான உபகணங்கள் வைத்திருத்தல் அவற்றை அடிக்கடி கிருமி தொற்று நீக்கம் செய்தல், 


போதுமான கழிவு பைகள் வைத்திருத்தல் வேண்டும். 





அத்துடன் டோக்கன் ஓழுங்கில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் 


பாதுகாப்பான அங்கி அணிந்து இருக்குமாறும் வாடிக்கையாளர்களின் பெயர், தொ.பேசி இலக்கம் பதிவு செய்யுமாறும், வழங்கப்படும்  சேவை விபரம் உள்ளேயும், வெளியே ஒட்டுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 








இவை அனைத்தையும் சரியாக கடை பிடிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம். எம். அஜித் தெரிவித்தார். 




No comments:

Post a Comment

Pages