திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பிரிவில் பெண் பொலிஸ் பரிசோதகராக (WIP) ஆக கடமையாற்றும் ஜெஸ்மின் ராணி (2020.02.08) பெண் பிரதம பொலிஸ் பரிசோதகராக (WCI) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
32 வருடங்களாக பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கு பகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.
1988 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் கொஸ்தாப்பிலாக (WPC) தனது கடமையை ஆரம்பித்த இவர் 1999 ஆம் ஆண்டு பெண் உப பொலிஸ் பரிசோதகராகவும் (WSI) 2010 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் பரிசோதகராகவும் (WIP) பதவி உயர்வு பெற்று கடமையாற்றியதோடு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு மற்றும் ஐக்கிய நாடுகள் (UN) சபையில் சமாதான பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி உள்ளார்.
தனது சேவைக்காலத்தில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு சிங்களம், ஆங்கிலம், தமிழ் உட்பட மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதோடு சட்டத்தினையும் கடமையினையும் மிக நேர்த்தியாக செய்து தனது அதிகாரத்திட்குட்பட்ட வகையில் அனைத்து இன மக்களுக்கு நீதியான முறையில் சேவையாற்றக் கூடிய இவர் (WCI) பதவி உயர்வு பெறுவதையிட்டு சிவில் சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
(யூஸூப் பஹ்மி - திருகோணமலை)
No comments:
Post a Comment