கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவிப்பு) - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் விசேட அறிவிப்பு)

Share This



(அப்துல்சலாம் யாசீம்) 








கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற இக்கால கட்டத்தில் நோன்பு பெருநாளைக்காக துணி மற்றும் ஆடை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற புடவைக் கடை உரிமையாளர்கள் பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்ளுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. 





இவ்வறிவித்தலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி ஏ. எம்.எம்.அஜித் விடுத்துள்ளார். 








தங்களது ஆடைக் கடைகளுக்கு முன்னால் வாடிக்கையாளர்களுக்கு கை கழுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தல் வேண்டும்.





தங்களது கடைகளுக்கு முன்னால் சுகாதார வழிமுறைகளை மக்களை கடைப்பிக்கச் செய்வதற்கு பொறுப்பான ஒருவரை நியமிக்குமாறும், 


ஆடைகளை விற்பனை செய்பவர்கள் மாஸ்க்,கையுறைகளை கட்டாயம் அணிந்திருத்தல் வேண்டும்.





அத்துடன் மாஸ்க் அணிந்தவர்களை மாத்திரம் தங்களது கடைகளுக்குள் அனுமதிக்குமாறும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற தங்களது கடைகளில் மக்களுக்கிடையில் 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் பேணல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 





இதேவேளை ஆடைகளை கொள்வனவு செய்ய வருகின்ற பொதுமக்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் கடைக்குள் அனுமதிக்காது சிறிய கடையாயின் ஒரே நேரத்தில் 5 நபர்களையும் பெரிய கடையாயின் 10 நபர்களையும் மாத்திரம் ஒரே நேரத்தில் அனுமதிக்க வேண்டும்.





தங்களது கடைகளுக்கு துணிகளை கொள்வனவு செய்ய வருகின்ற ஒரு வாடிக்கையாளருக்கு 20 நிமிடம் மாத்திரம் கால அவகாசம் வழங்கவும்.





எனவே மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை பேணி நடக்காத புடவைக் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை மன வருத்தத்துடன் அறியத்தருவதோடு தங்களது கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





ஆகவே மேற்சொல்லப்பட்ட அனைத்து அறிவுறுத்தல்களையும் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் எமது சமுதாயத்தை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


 







No comments:

Post a Comment

Pages