கந்தளாய் றெக்டோ அமைப்பு ஆசியா நிலையத்தின் அனுசரணையுடன் கந்தளாய் பொலிஸ் நிலையம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு சுகாதார தொற்று நீக்கி திரவங்கள், முகக்கவசம், கை உறை, கைகழுவும் உபகரணம் என்பவற்றை இன்று வழங்கி வைத்தது.
கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக வீரசேசகர, கந்தளாய் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி விஜயசிறி, கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்ஸா குமாரி ஆகியோரிடம் றெக்டோ அமைப்பின் தலைவர் அஸார் அவர்களினால் மேற்படி உபகரணங்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்துடனும் பிரதேச செயலாளர் செயலகத்துடனும் பெதுமக்களுக்கு ஏற்படும் சிநேகபூர்வ தொடர்புகளின்போது கோவிட்19 தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் முன்நடவடிக்கைக்காகவே இவ்உபகரணங்கள் வழங்கப்பட்டதாகவும், மேலும் கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச செயலகங்களுக்கும் அப்பகுதிப் பொலிஸ் நிலையங்களுக்கும் மேற்படி உபகரணங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக றெக்டோ அமைப்பின் தலைவர் அஸார் தெரிவித்தார்.
(எம்.ஜே. அன்வர் அலி)
No comments:
Post a Comment