நாம் தமிழர்கள் நாமே நம்மை பாதுகாப்போம்-சிவமோகன் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

நாம் தமிழர்கள் நாமே நம்மை பாதுகாப்போம்-சிவமோகன்

Share This



நாம் தமிழர்கள் நாமே நம்மை பாதுகாப்போம் அதற்கான காலம் வந்துவிட்டது இந்த அரசை நம்பி எந்த பிரயோசனமில்லை. இன்று இந்த நோய் இவ்வளவு தூரம் அகோரம் எடுத்தும்  வடபகுதி மாவட்டங்களும் மலைநாட்டுப் பிரதேசங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கின்றது என்றால் அது நமது மக்களின் விட்டுக்கொடுப்பும் அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்ட முறைகளாகும். அதையும் கெடுத்து விடுவது போல் இன்று நம்முள் இந்த ஊடுருவல் நடந்து கொண்டிருக்கின்றது நாங்கள்  விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.




வீட்டுக்கு வீடு  எம்மை பாதுகாப்போம் தனிமனித சுகாதாரத்தை செம்மையாக பேணுவோம். அனாவசியமாக வீட்டுக்கு வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே இருப்போம்.வெளியே  போனாலும் முழுமையாக குளித்துவிட்டு உள்ளே வருவோம் அதுதான் எங்களது பண்பாட்டு நடைமுறை.மரண வீட்டுக்கு போனால் நாங்கள் குளித்து விட்டு உள்ளே செல்வோம். ஏனென்றால் அங்கு  உள்ள கிருமி  எங்களிடம் தொற்றிக் கொள்ளும் என்பதை தடுப்பதற்காக.ஆகவே எங்களை நாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.




காய்ச்சல் வருபவர்கள் அதன் அறிகுறிகள் தென்படுபவர்கள் இருந்தால் அவர்களினை  தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறையினை தெரிவு செய்வோம்.அறை இல்லாதவர்கள் இன்னொரு வீட்டை சீர்செய்து கொள்வது நல்லது . அதனுள்  சந்தேகத்துக்குரிய தொற்று உள்ளவர்களை  வைத்துக் கொள்ளலாம்.அதுபற்றி சுகாதரத்துறையினருக்கு  எவ்வித ஒளிவுமறைவும் இன்றி தெரியப்படுத்த வேண்டும்.அவர்கள் உதவியுடன் எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். என வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Pages