குளத்துக்கு நீராடச் சென்ற நபர் மாயம்-ஹொரவ்பொத்தானையில் சோகம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

குளத்துக்கு நீராடச் சென்ற நபர் மாயம்-ஹொரவ்பொத்தானையில் சோகம்!

Share This






ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரதங்கடவல குளத்துக்கு நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






இச்சம்பவம் இன்று (05)பிற்பகல் இடம்பெற்றுள்ளது.





நீரில் மூழ்கி காணாமல் போனவர் ஹொரவ்பொத்தான - 100 ஏக்கர் பகுதியைச் சேர்ந்த  ஒரு பிள்ளையின் தந்தையான எம். டி. அரூஸ் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.








வீட்டிலிருந்து  சக நண்பர்களுடன் குளத்திற்கு நீராடச் சென்றபோது தாமரை பூவை ஆய்வதற்காக நீண்டு சென்ற போது இவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் பொலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.





காணாமல்போன இளைஞரின் சடலத்தை தேடும் பணியில் பொலிஸார் கடற்படையினர் மற்றும் உறவினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.




No comments:

Post a Comment

Pages