(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த எட்டு வயது சிறுமியை உறவினர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
முள்ளிப்பொத்தானை - யுனிட் 10யைச் சேர்ந்த பாத்திமா நஸ்னா என்ற 8 வயது சிறுமியை திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் தனது பாட்டியுடன் விட்டுவிட்டு மற்றைய பெண் மருந்து எடுப்பதற்காக பாமசிக்கு சென்றபோது அருகில் உள்ள இளைஞர் அனுமதியில்லாமல் பாட்டிக்குத் தெரியாமல் கடத்திச் சென்ற குற்றச்சாட்டிற்காக
இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தனது பாட்டியுடன் ஹொரவ்பொத்தான பிரதேசத்திற்கு மருந்து எடுப்பதற்காக கடந்த 11ஆம் திகதி சென்று மீண்டும் முள்ளிப்பொத்தானை பகுதிக்கு செல்வதற்காக திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகை தந்த நிலையில் இச்சிறுமி கடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
எட்டு வயது சிறுமிக்கு தாகம் ஏற்பட்ட போது குடிப்பதற்கு தண்ணீர் போத்தல் வாங்கி கொடுப்பதாக கூறிக்கொண்டு பிள்ளையின் கையை பலாத்காரமாக பிடித்து முச்சக்கரவண்டியில் அழைத்துச்சென்று பின்னர் சிறுமியை விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் சிறுமியின் பாட்டி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி துமிந்த மகேஷ் அவர்களின் ஆலோசனையின் பேரில் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் மற்றும் சிறுவர் பெண்கள் நன்னடத்தைப் பிரிவு பொறுப்பதிகாரி விந்தியா டில்ஷானி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் சுற்றி வளைத்து சிசிடி கானொனி மூலம் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சீனக்குடா - 4 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த பேதுறு ஹேவா மகேஷ் குணதிலக (23வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடத்திச் சென்ற சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment