திருமலை-சீனக்குடாவில் பதட்டம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலை-சீனக்குடாவில் பதட்டம்!

Share This



திருகோணமலை- சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவர்கள்  வாகனங்களை நிறுத்தி தாக்குதல் நடாத்தி உள்ளனர்.





இத்தாக்குதல் இன்றிரவு (07) இடம்பெற்றுள்ளது. 





 சீனக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு வீதியால்  சென்றுகொண்டிருந்த  வாகனங்களை நிறுத்தி  தாக்குதல் நடத்தியதாகவும்  இதனால்  அரச  போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் ஒன்றும் 2 தனியார் பஸ்களும் வேன் மட்டும் கார் முச்சக்கரவண்டி போன்றவற்றை சேதமாக்கி உள்ளதாகவும் தெரிய வருகின்றது. 





ஜந்திற்கும் மேற்பட்டோர் காயப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.





சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Pages