வீதியில் விழுந்து கிடந்த பணப்பையை தேடிச்சென்று ஒப்படைத்த மாணவன் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

வீதியில் விழுந்து கிடந்த பணப்பையை தேடிச்சென்று ஒப்படைத்த மாணவன்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை -எத்தாபெந்திவெவ வீதியில் விழுந்து கிடந்த பணப்பையை தேடி சென்று  ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 


இன்று (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த முதலிஹாமிகே ரணசிங்க என்ற 57 வயதுடைய நபர்  வங்கிக்குச் சென்று வீட்டுக்கு செல்லும் வழியில் பெரும் தொகை பணமும், அவரது வங்கி அட்டையும் அதன் இரகசிய இலக்கமும் மற்றும்  வங்கி புத்தகமும் வீழ்ந்து கிடந்துள்ளது. 

இதனையடுத்து வீதியில் கிடந்த பணப்பையை எடுத்துக் கொண்டு அவரது அரபிக் கல்லூரி அதிபரிடம் ஒப்படைத்துவிட்டு உரியவரை விசாரித்து தனது பணப்பையை எவ்வித குறைபாடும் இன்றி வழங்கியுள்ளார். 

இவ்வாறு பணப்பையை ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம். அமான் முன்னிலையில் வழங்கியுள்ளார். 


இதன் போது அரபிக் கல்லூரி அதிபர் எம். ஐனுதீன் மௌலவியும் கலந்து கொண்டார். 



No comments:

Post a Comment

Pages