(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலையில் மின்சாரம் தடைபட்டு உள்ளமையினால் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் சன நெரிசல் ஏற்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை முதல் மின்சாரம் தடைபட்டு இருப்பதினால் திருகோணமலை பெற்றோல் நிரப்பு நிலையங்களில் ஜெனரேட்டர் பாவனை குறைவாக காணப்படுவதால் ஒரு பெற்றோல் நிரப்பு நிலையத்தில் மாத்திரம் ஜெனரேட்டர் பாவிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் மக்கள் பெட்ரோல் அடிப்பதற்காக நீண்ட வரிசையில் இருப்பதனையும் எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
குறிப்பாக மக்கள் அதிகரித்துள்ளமை நாள் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் நீண்ட வரிசையில் மக்கள் வெயிலில் இருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
No comments:
Post a Comment