விக்னேஸ்வரன் உடைய கதை எனக்கு தேவையில்லை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று (02) பெண்கள் அணியினர் ஏற்பாடு செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு ஆசனங்களையும் வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை உறுதியாக பெறும் எனவும் இரா சம்பந்தன் இதன்போது தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட கிழக்கில் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுவது உறுதி எனவும் வெற்றி பெற்று இலங்கையினுடைய தேசிய அரசியலில் மீண்டும் எதிர்க்கட்சி ஸ்தானத்துக்கு வரும் வல்லமை பெறும் என்பது உறுதியாக நம்பப்படுகின்ற ஒரு விஷயமாகும் எனவும் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படவேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதுடன் முக்கிய பிரச்சனை தீர்வு தொடர்பாகவும் அந்த அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையில் உள்ளதுடன் நாங்கள் அரசியல் சாசனம் தீர்வை அடைவதற்கு உரிய வாசலில் நின்று கொண்டிருக்கிறோம்
அந்த தீர்வு அடுத்த பாராளுமன்றத்தில் எங்களுக்கு கிடைக்கும் என்பதில் மிகத் திடகாத்திரமான உறுதியுடன் நாங்கள் இருக்கின்றோம்.
5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தமிழ் மக்களும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து திருகோணமலையில் இரண்டு ஆசனங்களைப் பெறவேண்டும் எனவும் இரா சம்பந்தன் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment