திருமலையில் கார் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- முச்சக்கர வண்டி சாரதி மரணம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலையில் கார் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- முச்சக்கர வண்டி சாரதி மரணம்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் சொகுசு கார்  முச்சக்கர வண்டியுடன் மோதியதில்  முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 

சொகுசு கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியில் மோதி இன்னுமொரு வாகனம் ஒன்றினை சேதப்படுத்தி உள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை - சோனக வாடி, மூர் வீதியைச் சேர்ந்த நடராசா அனுஷாந்தன் (31 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Pages