ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி

Share This


 "வருமுன் காப்போம்"ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி

ஆரோக்கியமான வாழ்வுக்காக உடற்பயிற்சின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அதனை ஊக்கப்படுத்தும் முகமாக நடைபனி தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இருந்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை வரை ஆரம்பமாகியது . 

இன்று ( 202/09/06) காலை 6.15 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வு திருகோணமலை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளரின் தலைமையில் தம்பலகாமம் பிரதேச செயலகதில் கடமை புரியும் அதிகாரிகள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் பிரதேச பொது மக்கள் என பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு  மகிழ்ச்சியான காலைப்பொழுதினை ஆரம்பித்து வைத்தார்கள்.

இதன்போது பிரதேச வைத்திய பொறுப்பதிகாரி Dr T. ஜீவராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச வைத்தியசாலையின் புணர்நிர்மானம் செய்யப்பட்ட பிரதான நுழைவாயில் பிரதேச செயலாளர்  ஜே.ஸ்ரீபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Pages