திருகோணமலை மீன் சந்தையில் 37 பேருக்கு பிசிஆர் பரிசோதனை இன்று முன்னெடுக்கப்பட்டதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திருகோணமலை மீன் சந்தைக்கு கொழும்பிலிருந்து வாகனங்கள் வந்து சென்றதாகவும் இதன் அடிப்படையில் இங்கு தரகராக செயல்பட்ட அனைத்து முதலாளிகளையும் தொழிலாளர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிசிஆர் பரிசோதனையின் முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment