(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல்ஸ பகுதியில் கைக்குண்டுடன் இளைஞரொருவரை நேற்றிரவு (24) 7.00 மணியளவில் கைது செய்துள்ளதாக கந்தளாய்-சூரியபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வான் எல-ஆயிலியடி,பக்கீரான் வெட்ட பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிப் சறூக் (34வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஆயிலியடி பகுதியிலிருந்து கிண்ணியா சூரங்கள் பகுதிக்கு கைக்குண்டை கொண்டு வந்த வேளை விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இதனையடுத்து இவரின் வீட்டை சோதனையிட்ட போது ஒன்றறை அடி நீளமான வால் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் சூரியபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்தில் பொறியியலாளர் (இன்ஜினியரு பலகாய) பிரிவில் இருந்ததாகவும், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வான் எல பொலிசாரினால் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்தவர் எனவே ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசேட பொலிஸ் அதிரடி படையினர் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment