சுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள் -இம்ரான் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள் -இம்ரான்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

சுருக்குவலைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கடற்தொழில் அமைச்சு தொடர்பான  வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1970 ஆம் ஆண்டு முதல் சுதந்திரமாக சுருக்குவலை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு முதல் அனுமதி பத்திரம் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டது.

இதில் ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் சென்றே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
கிண்ணியாவில் மூதூர் ஜமாலியா பிரதேசங்களில் சிறிய படகுகளை கொண்டே மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் ஏழு கிலோமீட்டர் அப்பால் சென்று மீன்பிடிப்தில் உள்ள சிரமத்தை அமைச்சர் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அத்துடன் இந்த ஏழு கிலோமீட்டர் கட்டுபாடு திருகோணமலை உட்பட சில மாவட்டங்களிலேயே நடைமுறையில் உள்ளது ஆகவே ஏன் திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு மட்டும் இந்த பாகுபாடு.

இந்த ஏழு கிலோமீட்டர் எல்லை கணிக்கப்படுவதிலும் பிரச்சினை உள்ளது. படகுகள் புறப்படும் கரையில் இருந்து  கணிக்கப்படாமல் அவர்கள் மீன்பிடிக்கும் கடலுக்கு அண்மையில் உள்ள கரையில் இருந்தே கணிக்கபடுகிறது. ஆகவே இது தொடர்பான உறுதியான நிலைப்பாடுகள் பேணப்பட வேண்டும்.

ஆகவே சிறிய படகுகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஏழு கிலோமீட்டர் எல்லையை குறைக்க வேண்டும் அல்லது இந்த பிரதேசங்களில் இறங்கு துறை அமைத்து அவர்களுக்கு மானிய விலையில் பெரிய இயந்திர படகு பெற்றுக்கொடுக்கவேண்டும்.

அத்துடன் சுருக்கு வலைக்கான அனுமதி பத்திரம்வழங்குவதிலும் முறையான ஒழுங்குமுறை இல்லை. சில  வருடங்கள் எட்டு மாதம் சில வருடம் பத்துமாதம் என வழங்கப்படுகிறது. ஆகவே இதுவும் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் வழங்க வேண்டும்.இந்த வருடத்துக்கான அனுமதி பத்திரம் இன்னமும் வழங்கப்படவில்லை.



கிண்ணியா மூதூர் தோப்பூர் பிரதேசங்களை உள்ளடக்கியதாக மீனவ துறைமுகம் அமைக்கப்படல் வேண்டும்.தற்போது திருகோணமலை சீனக்குடா மீனவ துறைமுகத்துக்கு மேலதிகமாக மூதூர் தொகுதியில் 
கிண்ணியா மூதூர் தோப்பூர் பிரதேசங்களை உள்ளடக்கியதாக மீனவ துறைமுகம் அமைக்க அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடும் மழை வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும்போது மீனவர்கள் மாதக்கணக்கில் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது ஆகவே இக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு வழங்கும் நிவாரணம் போல் மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் நன்னீர் மீன் உற்பத்திக்கு பாரிய பங்களிப்பு செய்யும் தேசிய நீர் உயிரிணவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) யின் நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையம் (Freshwater Aquaculture Development Centers) கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படாதது பெரும் குறைபாடாக உள்ள்து.எனவே அந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு நன்னீர் மீன்வளர்ப்பு அபிவிருத்தி நிலையம் திருகோணமலையில் அமைக்க வேண்டும்.

ஏன் எனில் எமது மாவட்ட குளங்களில் விடப்படும் நன்னீர் மீன் குஞ்சுகளை நாம் தம்புள்ளயில் இருந்தே கொள்வனவு செய்யவேண்டி உள்ளது.அமைச்சர் அனுமதி அளித்தால் இதற்கான காணியையும் என்னால் அடையாளப்படுத்த முடியும்.

No comments:

Post a Comment

Pages