(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை -தென்னமரவாடி, திரியாய் காணிகளுக்குள் நுழைய விதிக்கப்பட்ட
இடைக்கால தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (23) இக்கட்டளையை நீடித்துள்ளார்.
திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
திருகோணமலை தென்னமரவாடி,திரியாய் காணிகளின் உரிமையாளர்கள் சுதந்திரமாக சென்று காணியை பராமரிக்க எவ்வித தடையும் தொல் பொருள் திணைக்களம் ஏற்படுத்தக் கூடாது எனவும் அதில் எந்தவித தலையீடுகளையும் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளக் கூடாது எனவும் விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனு தொடர்பான ஆட்சேபனையை வைப்பதற்கு திகதி கோறப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி இடைக்கால தடை உத்தரவை நீடித்தார்.
இன்றைய தினம் இவ்வழக்கிற்கு சட்டத்தரணி சயந்தன் உட்பட பிரஷாந்தினி உதயகுமார் ஆஜராகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment