(பதுர்தீன் சியானா)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சடலம் இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் தம்பலகாமம்-கோயிலடி பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி கருணாகரன் (60வயது) எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது -குளிப்பதற்காக சென்றவர் வீட்டுக்கு வரவில்லை என்று பார்த்த போது கிணற்றில் விழுந்த நிலையில் கிடப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதைடுத்து பொலிசார் இன்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு சென்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment