(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான்
சமிலாகுமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று (30வயது) சந்தேக நபர்கள் இருவரையும் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை உவர்மலை பகுதியைச் சேர்ந்த பால்பாண்டியன் உதயகுமார் (36 வயது) மற்றும் உப்புவெளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்தின் கிறிஸ்டி வினோத் (34 வயதுடைய) எனவும் தெரியவருகின்றது.
குறித்து இருவரும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வீடியோக்களை வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட உப்புவெளி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி டிக்டொக் ஊடாக செய்யப்பட்ட வீடியோக்களை அனுப்பியதாகவும் இவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை பல நீதிமன்றங்கள் தடைவிதித்து இருந்தபோதிலும் மக்களை குழப்பும் நோக்கில் இவ்வாறான வீடியோக்கள் அனுப்பப்பட்டமை மக்கள் மத்தியில் இன்னும் அமைப்பை மெருகூட்டுவதற்கு காரணமாக இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க கட்டளையிட்டார்.
No comments:
Post a Comment