(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மூதூர் பெரியவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
இத்தீர்ப்பின் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று (02) வழங்கி வைத்தார்.
2017 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 28ஆம் திகதி பெரியவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்று வந்த சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மூதூர்- பாலநகர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா ரியாஸ் (37 வயது) என்பவருக்கு எதிராக
திருகோணமலை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இரண்டு வெவ்வேறு குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இலங்கை தண்டனைச் சட்டக்கோவை திருத்தச் சட்டங்களால் திருத்தப்பட்ட கட்டளை சட்டக்கோவை 365/ஆ (2) பிரிவின் கீழ் இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகள் சார்பில் அரச சட்டத்தரணி ஹலீமா பாயிஸ் குறிக்கப்பட்ட வழக்கினை சட்டமா அதிபர் திணைக் களம் சார்பில் நெறிப்படுத்தினார்.
இரு சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து திரவம் ஒன்று பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த திரவம் எதிரியின் இரத்த மாதிரியை பெற்று டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதன் பின்னர் டிஎன்ஏ அறிக்கையை சமர்ப்பித்த இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
99% எதிரிதான் குற்றச் செயலை புரிந்துள்ளார் என அரச சட்டவாளர் ஹலிமா பாயிஸ் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்தார் குறிக்கப்பட்ட அனைத்து சாட்சியங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம் பாடசாலையில் வைத்து மாணவி மீது தகாத முறையில் நடந்து கொண்டவர் எதிரிதான் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதால் இரு மாணவிகளது இரண்டு வழக்குகளுக்கும் எதிரியை மன்று குற்றவாளி என தீர்ப்பளித்தது.
குறித்த எதிரிக்கு 20 வருடம் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன் 10 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் நான்கு வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.
இந்நிலையில் அரச செலவாக 20 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அப்பணத்தை கட்ட தவறும் பட்சத்தில் ஒரு வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கட்டளையிட்டார்.
No comments:
Post a Comment