இன்று திருகோணமலை மற்றும் மூதூர் பகுதிகளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

இன்று திருகோணமலை மற்றும் மூதூர் பகுதிகளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 33 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

இன்று (22ஆம்) திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை வரை அன்டிஜென் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ஜமாலியா பகுதியில் 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான்கு மாணவர்கள் உட்பட 12 குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மரத்தடி சந்தியில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் மூவருக்கு தொற்று  உறுதிசெய்யப்பட்ட நிலையில் நிவ் மூர்லேனில் வசித்துவரும் தீயணைப்பு படை வீரரின் தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்  தந்தை கோயிலில் கடமையாற்றி  வருபவர் எனவும் தெரியவருகின்றது.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட  58 மற்றும் 53 வயதுடைய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 49  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 10 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தொடர்ந்தும் ஜமாலியா மூதூர் பகுதிகளில் அன்டிஜென்  பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

Pages