(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு வீடு முற்றாகவும் அறுபத்தி நான்கு வீடுகள் பாதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்தார்.
இரண்டாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி அதிகாலை வரை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பிரதேசத்தை தவிர்ந்த அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேசத்தில் 260 குடும்பங்களைச் சேர்ந்த 746 நபர்கள் 14 இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தடுத்து வைத்துள்ளதாகவும் அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதேசம் குச்சவெளி பிரதேசம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மாவட்டத்தில் 864 குடும்பங்கள் 2558 உறுப்பினர்கள் இடைத்தங்கல் முகாம்களிலும் 2148 குடும்பங்களைச் சேர்ந்த 6946 பேர் உறவினர்களின் வீடுகளிலும் தங்கி இருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.




No comments:
Post a Comment