(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-வவுனியா பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் லொரி மற்றும் கார் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து திருகோணமலை பிரிமா தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த லொறி நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இன்று 2 ஆம் திகதி அதே இடத்தில் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது மழை பெய்து வருவதினால் வாகன சாரதிகள் வேகத்தை குறைத்து வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment