செத்தால் சடலத்தை கொண்டு செல்வதற்கு பாதையில்லை-சாந்திபுரம் மக்கள் கோரிக்கை! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

செத்தால் சடலத்தை கொண்டு செல்வதற்கு பாதையில்லை-சாந்திபுரம் மக்கள் கோரிக்கை!

Share This

 




(அப்துல்சலாம் யாசீம்)

செத்தால் சடலத்தை கொண்டு செல்வதற்கு பாதையில்லை-தங்களுக்கு பாதையை புனரமைத்து தருமாறு  திருகோணமலை-சாந்திபுரம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராம மக்கள் தமது பூர்வீக இடங்களை விட்டுச் சென்று மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அவர்களுடைய வீடுகளுக்கு செல்வதற்கு வீதி புனரமைப்பு செய்து கொடுக்கப் படவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.


தேர்தல் காலங்களின் போது அனைத்து கட்சிகளையும் சார்ந்த வேட்பாளர்கள் தமது கிராமத்திற்கு வருகை தந்து தங்களுக்கு வாக்குகளை செலுத்துமாறும் வெற்றி பெற்றால் முதலாவது வேலையாக தங்களுடைய வீதிகளை புனரமைத்து தருவதாக கூறிச் சென்று இன்று வரைக்கும் எமது வீதிகள் புனரமைப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வில்லை எனவும் குற்றம் சுமத்துகின்றனர்.


சாந்திபுரம் உள்ளக வீதியில் யாராவது செத்தால் சடலத்தைக் கொண்டு செல்வதற்கு கூட பாதை இல்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள் சாந்திபுரம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர்.



No comments:

Post a Comment

Pages