திருகோணமலையில் பள்ளிவாசல்களை மூடுமாறு அறிவிப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலையில் பள்ளிவாசல்களை மூடுமாறு அறிவிப்பு

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலையில் அனைத்து பள்ளி வாசல்களையும் தற்காலிகமாக மூடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகர கிளை கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தினை அனைத்து பள்ளிவாசல்களிலும் தலைவர் செயலாளருக்கு இன்று (21) அனுப்பி வைத்துள்ளனர்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா திருகோணமலை நகர கிளையினர்- மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனமும் இணைந்து எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவும் கிழக்கு மாகாண சுகாதார பணிமனையின் ஆலோசனைகளையும் மாவட்டத்தின் சுகாதார நலன் கருதியும் இன்று 21 ஆம் திகதி பிற்பகல் அசர் தொழுகையுடன் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக பள்ளிவாசல்களின் நடைபெறும் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்மா தொழுகை எதுவும்  நடைபெற மாட்டாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன்  அனைத்து முஸ்லிம்களும் வீடுகளில் தொழுகை இஸ்திக்பார் போன்ற அமல்களில்  ஈடுபடுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்வதாகவும் தலைவர் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Pages