திருமலையில் கோழி இறைச்சி கடை ஊழியர்களுக்கு கோரோனா-பொதுமக்களின் உதவியை கோரும் சுகாதாரத் திணைக்களம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருமலையில் கோழி இறைச்சி கடை ஊழியர்களுக்கு கோரோனா-பொதுமக்களின் உதவியை கோரும் சுகாதாரத் திணைக்களம்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை மின்சார நிலைய வீதியில் உள்ள மாட்டுறைச்சிகடை மற்றும் கோழி இறைச்சி கடைக்கு சென்றவர்கள் சுகாதார வைத்திய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் இன்று (20) இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதி கோழி கடையில் வேலை செய்த ஜமாலியா, துலசிபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 40 வயது உடையவர்களுக்கு இன்று  20ம் திகதி அன்டிஜென் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை கோழிக் கடை மற்றும் மாட்டுறைச்சி  கடைகளுக்கு சென்றவர்கள் உப்புவெளி  பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ அல்லது திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கோ இல்லாவிட்டால் தங்களது அருகில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ. பிரேமானந் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்களுக்கு 19ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Pages