வைத்தியர்கள்- தாதியர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

வைத்தியர்கள்- தாதியர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம்!

Share This


வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதினாலேயே தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் தெரிவிக்கின்றனர்.


திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒரு முறை கொழும்பு, கம்பஹா மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளுக்கு சென்று வருவதாகவும் இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சிற்றூழியர்களுக்கு மாத்திரம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த இரண்டு வைத்தியருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மூதூர் வைத்தியசாலையில் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை இவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்திய நிபுணர்கள் வாரத்திற்கு ஒருமுறை வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் இதேநேரம் நோயாளர்கள் அதிகளவில் தனியார் மருத்துவமனைகளிலும், வைத்தியசாலையிலும் வைத்திய நிபுணர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் திருகோணமலை மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் அதிகளவில் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இக்காலப்பகுதியில் வெளி மாவட்டங்களுக்குச் சென்று வரும் வைத்திய நிபுணர்கள்,வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் இன்று  (27ம்) திகதி வரைக்கும் 120 நோயாளர்கள் இனங்காண பண்பாட்டுப் தாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Pages