திருகோணமலை-வெறுகல்- கல்லடி கிராமத்தில் அமைந்துள்ள மலைநீலி அம்மன் வித்தியாலயத்தில் மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியரொருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை இன்று (19) மூதூர் நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்லடி மலைநீலி அம்மன் வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமி தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் இலங்கைத்துறைமுகத்துவாரம்- ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 28 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
இருந்தபோதிலும் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போதும் கல்லடி பிரதேசத்தில் சைவ மதம் மற்றும் வேதம் என்ற சமய முரண்பாடுகள் நிலவி வருவதாகவும் இதனால் அம்மாணவி மற்றும் அவரது குடும்பம் சைவ மதத்தில் இருந்து வேதத்திற்கு சென்றுள்ளதாகவும் இந்த சமய முரண்பாட்டின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment