திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொம்பன் யானையொன்று காயப்பட்ட நிலையில் விழுந்து கிடப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் (09) நேற்றிரவு இடம் பெற்றுள்ளது
மொரவெவ-ஆறாம் வாய்க்கால்- நவநகர குளத்துக்கு அருகில் 4 வயதுடைய கொம்பன் யானை காயப்பட்ட நிலையில் விழுந்துள்ளதாகவும், காயம் ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிரித்தலை பகுதியிலிருந்து வைத்தியர்கள் வரை உள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மொரவெவ பிரதேச பொறுப்பாளர் ஜகத் தசநாயக்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment