(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள மாட்டு இறைச்சி கடை விற்பனையாளர் ஒருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இப்பரிசோதனை இன்று (18) காலை மேற்கொள்ளப்பட்டதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
கடந்த 16ஆம் திகதி திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய குறித்த இறைச்சி கடை விற்பனையாளர் ஒருவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்ட போதே உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இவரது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை மற்றும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரின் மச்சான் ஆகியோர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனவும் இவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரின் மச்சான் திருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றில்
10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வருபவர் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment