திருகோணமலை மாவட்டத்தில் இனம்,மதங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவதோடு, திருகோணமலை மாவட்டத்தின் பொதுவான பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எடுத்துக் கூறி தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு உத்தியோகபூர்வமாக மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருகோணமலை என் சி வீதியில் அமைந்துள்ள ராஜகீய சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவிற்கு நான்கு மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்களான
அக்போபுர ஞான விமல தேரர். தென்கயில ஆதீன சுவாமி அகஸ்தியர் அடிகளார். சென்றல் ரோட் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஏ.ஆர்.பரீட், அருட்தந்தை ஜோஜ் திசாநாயக்க, ஆலோசகர்களாக இதன்போது நியமிக்கப்பட்டனர்.
சமய தலைவர்களின் ஆசி உரையுடன் புதிய நிர்வாக தெரிவு இடம் பெற்றது.
புதிய தலைவராக எஸ். டி. ஜெயவீர இணைத் தலைவர்களாக ஆர்.எஸ்.ஜெரோம் மற்றும் எஸ்.எச்.எம் நியாஸ் அவர்களும் செயலாளராக எம். கே. காமினி திஸ்ஸ மற்றும் இணைச் செயலாளராக என்.பரசுராமன் எம்.ஏ. ஜெய்னுலாப்தீன் பொருளாளராக கே.பி காமினி ஆகியோர் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள் பிரிவிலும் இருவரை தெரிவுசெய்து எதிர்காலத்தில் பிரதேச ரீதியாக பல முன்னெடுப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிய வருகிறது. அன்றைய தினம் இலவசமாக பாடசாலைகளுக்கு முகக்கவசம் (மாஸ்க்)வழக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எதிர்காலத்தில்
1)போதைப் பொருள் பாவனை,விற்பனை
2)சுருக்குவலை கொண்டு மீன்பிடித்தல்,
3)பொது வைத்தியசாலையின் குறைபாடுகள்.
4)மெக்கேசியர் விளையாட்டு அரங்கு
புனரமைக்கப்படாமை
5)திருமலை-கொழும்பு
நவீன வசதிகளுடன் கூடிய புதிய புகையிரதம் கோரல்
6)வெள்ளம்,மழைநீர் வழிந்தோடக்கூடிய நவீன வடிகால் அமைப்பு
போன்ற பொதுப் பிரச்சினைகளை
சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து தீர்வைப் பெற்றுக் கொள்வதற்க்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மூன்று இனங்களின் சார்பில் மூன்று தலைவர்களும் கலந்து கொள்ளவதற்க்கான மாவட்ட செயலகத்தில் தலைவர்களுக்கு பங்கு கொள்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மாவட்ட செயலாளர் உடன் கலந்து ஆலோசிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
No comments:
Post a Comment